வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையில் சுட்டெரிக்கும் வெயிலை தாக்குப் பிடிக்க முடியாமல் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோள பயிர்கள் வாடி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.




தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்துக்கு விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது பண்படுத்தி இயற்கை உரம் இட்டு ஆட்டுக்கிடை மாட்டுகிடை போட்டும் உழவு செய்தும் நிலங்களை தயார் படுத்தி உள்ளனர். ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தாண்டு நிலங்களில் கலைகள் அதிகம் முளைத்துவிட்டன இதனால் பலமுறை உழவு செய்து கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது.




தொடர்ந்து மழை பெய்ததால் புரட்டாசி மாதமும் மழை தொடரும் என நம்பி ஆவணி மாதம் இரண்டாவது வாரமே பருத்தி மக்காச்சோளம் விதைகளை நிலங்களில் டி ஏ பி அடியுரம் இட்டு ஊன்றினர். ஈரப்பதத்துக்கு விதைகள் முளைத்து ஓரளவு வளர்ந்துள்ளன. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக கோடை போல் வெயில் வாட்டி வருகிறது வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் ஈரப்பதம் இன்றி மண் வறண்டு காணப்படுகிறது, கடும் வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மக்காச்சோள பயிர்கள் வாடி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.




இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறுகையில், கடந்த நான்கு மாத காலமாக அமாவாசை தினத்தை ஒட்டி மூன்று நாட்கள் மழை பெய்தது இதுபோல் புரட்டாசி மாதம் 10ஆம் தேதி மகாளய அமாவாசையொட்டி மழை பெய்யும் பயிர்களுக்கு வேண்டிய ஈரப்பதம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். சில கிராமங்களில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கடந்த ஐந்து நாட்களாக பிற பயிர் இது வித்துக்களை விதைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மழை பெய்யாத விவசாயிகள் கடுமையாக தவிர்த்து வருவதாக கூறியவர் பயில்கள் காய்ந்து விடுமோ என்ற கவலையில் உள்ளோம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகும் போல் தெரிகிறது. நகைகள் அடமானத்துக்கு போய்விட்டது கையில் இருந்த பணத்தை நிலங்களுக்கு செலவழித்தாகி விட்டது அன்றாட செலவுக்கு கூட விவசாயிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் கூறியபடி 2020-2021 ஆண்டுக்குரிய பயிர் காப்பீடு இன்னும் கிடைக்கவில்லை எனவே விவசாயிகள் மீது கருணை கொண்டு இயற்கை இடர்பாடால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அரசு கை கொடுத்து உதவ வேண்டும் என்கிறார்.