முல்லைப்பெரியாறு நீர் பாசனம் மூலம் பப்பாளி விவசாயம் - ஆர்வம் காட்டும் விவசாயிகள்

சின்னமனூர் அருகே உப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முல்லைப்பெரியாறு நீர் பாசனம் மூலம் செய்யப்படும் பப்பாளி விவசாயத்திற்கு ஆர்வம் காட்டும் விவசாயிகள்.

Continues below advertisement

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. அதன்படி, சின்னமனூர் அருகே உப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முல்லைப்பெரியாறு நீர் பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. இந்த பகுதியில் நெல், கரும்பு, வாழை, மற்றும் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பப்பாளி சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Continues below advertisement

Srilanka Cricket Board: உலகக்கோப்பையில் தொடர் தோல்வி.. இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்படுவதாக அதிரடி அறிவிப்பு..!

பப்பாளி கன்றுகள் நடவு செய்த நாளில் இருந்து 7 மாதங்களுக்குள் விளைச்சல் அடைந்துவிடுகிறது. இதற்கான தண்ணீர் தேவையும் குறைவாக உள்ளது. இந்த விவசாயத்தில் ஒரு வருடத்திற்கு மகசூல் கிடைக்கும்.

இதனால் உப்புக்கோட்டை அருகே பாலாா்பட்டி பகுதியில் சுமார் 2 ஏக்கரில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பாலார்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பப்பாளி மரங்களில் பப்பாளிகள் நன்கு விளைச்சல் அடைந்து தொங்குகின்றன. 2 வாரத்திற்கு ஒருமுறை காய்கள் பறித்து விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளைச்சல் அடையும் பப்பாளிகளுக்கு வெளிமாநிலங்களில் கடும் கிராக்கி உள்ளது. மருந்துவ குணம் உடையதால் மருந்து தயாரிப்பதற்காக வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Baakiyalakshmi: சிக்கிய செழியன்.. பாக்யா வீட்டுக்கு வந்து தாண்டவம் ஆடிய மாலினி.. பாக்கியலட்சுமி சீரியலில் இன்று..!

இதனை வியாபாரிகள் நேரடியாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்து வாங்கி செல்கின்றனர். கிலோ ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிக விலை கிடைப்பதால் பப்பாளி சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் சில விவசாயிகள் பப்பாளி சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Latest Gold Silver: வாரத்தின் முதல் நாளே ஹாப்பி நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை.. சவரனுக்கு எவ்ளோ தெரியுமா?

 

Continues below advertisement
Sponsored Links by Taboola