மழையால் சாய்ந்த நெற்கதிர்கள்...தங்களின் வாழ்வாதாரமே போச்சே...கரூரில் விவசாயிகள் கவலை

கரூர் குளித்தலையில் இரண்டாம் நாள் பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் சாய்ந்தன.

Continues below advertisement

கரூரில் நெற்கதிர்கள் சாய்ந்தன.

Continues below advertisement

கரூர் குளித்தலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்தன. இதனால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுக்காளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிரிகள் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அமராவதி ஆற்றில் வரும் தண்ணீரைக் கொண்டு இப்பகுதிகளில் நெற் பயிரிடப்பட்டு வருகிறது.

 


மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, பொன்னி ஐ.ஆர்.20 உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளனர்.நெற்பயிரிகள் நன்றாக வளர்ந்து அடுத்த வாரத்தில் அறுவடை செய்யப்பட இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் சாரல் மழை மற்றும் கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்து உள்ளது. இதனால் பயிரில் இருக்கும் நெல்மணிகள் தரையில் கொட்டியும் அவை மீண்டும் முளைக்கும் நிலையில் உள்ளன. மேலும் வயலுக்குள் இருக்கும் தண்ணீர் வடிய 15 நாட்களாகும் என்பதால் போதிய மகசூல் கிடைக்க வாய்ப்பு இல்லை. கடந்த ஆண்டை காட்டிலும் பாதிக்கு பாதி நெல் மூட்டைகள் கிடைக்கும் கூட வாய்ப்பில்லை என்றும் முட்டு வழி செலவு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு பெரிய அளவு ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையாக காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

 


 


குளித்தலை

குளித்தலை அருகே நங்கவாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளான மேல் நங்கவரம், தமிழ்ச்சோலை குறிச்சி, அணைஞ்சனூர், கோவிந்தனூர், சூரியூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் நெல் அறுவடைக்கு சில நாட்கள் உள்ள நிலையில் பருவம் தாண்டி சில நாட்கள் தொடர்பை பெய்தால் நெல் பயிர்கள் முற்றிலும் சாய்ந்த நிலையில் உள்ளது. சாய்ந்த நெற்பயிரிகள் அனைத்தும் முளைத்து அழுகிய நிலையில் காணப்படுகின்றன.

 

 

 

இதனால் அதிக அளவு நெல் சேதம் ஏற்பட்டதாவும் தொடர்ந்து மழை பெய்தால் அறுவடைக்கு முன் நெற்பயிரிகள் முற்றிலும் அறுவடை செய்யாமல் போய்விடும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஒரு ஏக்கர் விவசாயம் செய்வதற்கு 40,000 செலவாகிறது என்று விவசாயிகள் தெரிவித்து தற்போது பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்ததால் அதிக அளவு சேதம் ஏற்பட்டு விவசாயிகளுக்கு பெரும் இழப்பீடு ஏற்படும் எனக் கூறி வேளாண் துறை சார்பாக கணக்கீடு செய்து தமிழக அரசின் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி விவசாயிகளை வாழ்வாதாரத்தை காத்திட கோரிக்கை வைத்துள்ளனர்.

மழைநீர் புகுந்து நெற்பயிர்கள் பாதிப்பு இழப்பீடு கேட்கும் விவசாயிகள்.

கரூர் அருகே விவசாய நிலத்திற்குள் மழை நீர் தேங்கியுள்ளதால் நெற்பயிர்கள் பாதிப்படைந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சுக்காலியூர் முத்து கவுண்டன் புதூரில் வசிக்கும் விவசாயி சிவசாமி கூறியதாவது, நான் இப்போது கருப்பு கவுனி, ஆந்திரா பொன்னி, ஐ ஆர் 20 ஆகிய நெல் வகைகளை பகுதியில் விளைவித்துள்ளேன். இப்போது வரை தண்ணீர் கஷ்டம் இல்லாமல் பயிர்களை வளர்த்து விட்டேன். ஆனால் திடீர் பெய்த மழையால் பெரிய சேதத்தை இயற்கை செய்துவிட்டது. இன்னும் ஒரு மாதத்துக்கு வயலுக்குள் போக முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நெற்கதிருடன் உள்ள நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன. வழக்கமாக கிடைக்கும் மகசூல் பாதி அளவு தான் நெல் கிடைக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு குறைந்ததும் முட்டு வழி செலவாக ரூபாய் 30,000 வரை செலவாகியுள்ளது. அதிகம் ரூபாய் 60 ஆயிரம் கிடைத்திடும் என்று காத்திருந்தோம். ஆனால், ஏக்கருக்கு ரூபாய் 30,000 கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் மட்டும் 60 ஏக்கர் இப்படிப்பட்ட பாதிப்பை சந்தித்துள்ளது. நெற்பயிர் தண்ணீரில் முழுமையாக இருப்பதால் வைக்கோலும் கிடைக்காத வகையில் நெற்பயிரும் சேதமாகி உள்ளது. இதனால் மாடுகளுக்கு வைக்கோல் வெளியில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு எங்கள் கோரிக்கையை கருணையுடன் பரிசீலித்து உரிய இழப்பீடு வழங்கும் முன் வரவேண்டும் என்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola