தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது . அதேபோன்று தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காரணமாக நல்ல மழை அங்கங்கே பெய்துள்ளது. குறிப்பாகக் கடந்த டிசம்பர் மாதம் மிகத் தீவிர கனமழை தமிழ்நாட்டிற்குக் கிடைத்தது. முதல் வாரத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அதேபோல டிசம்பர் மாதத்தில் பின்னாட்களில் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் மோசமாக இருந்தது.




அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரியளவில் மழை எங்கும் இல்லாத ஒரு சூழலே இருந்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு விழுப்புரம், திருவாரூர் உள்ளிட்ட வடக்கு டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. மழை இன்னுமே கூட தொடரும் நிலையில், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று  காலை 6 மணி வரை சராசரியாக 13  சென்டிமீட்டர் மழை பதிவானது பதிவாகியுள்ளது. நிலையில் மாவட்டத்தில்  அதிகபட்ச சீர்காழியில் அதிகபட்சமாக 22 செ.மீ மழையும், கொள்ளிடத்தில் 18 செ.மீ மழையும், மயிலாடுதுறை 10 செ.மீ , மணல்மேடு 11 செ.மீ, தரங்கம்பாடி 8 செ.மீ குறைந்த பட்சமாக செம்பனார்கோயிலில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.


மழையால் ஸ்தம்பிக்கும் மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் புகுந்த தண்ணீர்! பக்தர்கள் அவதி!




இந்நிலையில் நீர் தேங்கிய தாழ்வான பகுதிகளில் பொக்லைன் வாகனம் மூலம் தூர்ந்து போயுள்ள மழை நீர் வடிகால்களை  போர்க்கால அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவுபடி சரி செய்யப்பட்டு தண்ணீர் வடியவைக்கப்பட்டு வருகிறது. இந்த கனமழையால் மயிலாடுதுறை தாலுக்காவில் மாப்படுகை, அருண்மொழித்தேவன், மணலூர், செருதியூர், முளைப்பாக்கம், மேல மருதாந்தநல்லூர், கீழ மருந்த நல்லூர், வேப்பங்குளம், சேத்தூர் அகர கீரங்குடி  நல்லத்துக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளும், தரங்கம்பாடி தாலுக்கா காளியப்பநல்லூர், அனந்தமங்கலம், ஒழுகைமங்கலம், எருக்கட்டாஞ்சேரி, கீழ் மாத்தூர். சீர்காழி தாலுக்காவில் சீர்காழி , வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூர், கொள்ளிடம், ஆச்சாள்புரம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாரான பயிர்கள் மழை நீரால்  சூழப்பட்டுள்ளது.




இந்த தண்ணீரை விவசாயிகள் வடியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மழை தொடர்ந்து நீடித்தால் பயிர்கள் அழுகுவது, முளைப்பது போன்ற செயல்களால் பெரும் சேதம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளார். ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் வரை செலவு செய்தும் தற்போது பெய்த மழையில் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாகவும், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பொதுப்பணித்துறையினர்  வாய்க்கால்களை முறையாக  தூர்வாராமல், A, B வாய்க்கால்களை மட்டுமே பெயரளவில் தூர்வாரிவிட்டு C மற்றும் D வாய்க்கால் தூர்வாரப்படாததே மழைநீர் தேங்க காரணம்  என்று, தற்போது போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வாரினால் மட்டுமே இந்த தண்ணீரை வடிய வைத்து பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த மழை பாதிப்புகளை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.