மயிலாடுதுறை மாவட்டத்தில் தாளடி மற்றும் சம்பா நெல் அறுவடை பணி  தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுகாக்களில் சுமார் 1.70 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் இந்தாண்டு பயிரிடப்பட்டிருந்தது. நிலத்தடி நீர் அது மட்டும் இன்றி, மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் திறக்கப்பட்ட காவிரி நீர் என தண்ணீர் கை கொடுத்ததன் விளைவாக மாவட்டம் முழுவதும் அதிக அளவில் சம்பா தாளடி பயிர் செய்யப்பட்டுள்ளது. 




இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 11-ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தீவிர தாக்கத்தால் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர் மழைநீரில் முழுவதும் மூழ்கி சேதம் ஆனது. அதற்கு அரசு இடுபொருள் நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 ரூபாயும், இன்சூரன்ஸ் தொகையும் வழங்கியுள்ளது. விவசாயம் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் மீண்டும் நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்று நடவும் செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 1.40 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர் செய்யப்பட்டு தற்பொழுது அறுவடை நடைபெற்று வருகிறது. மேலும், குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா அறுவடைப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 


HDFC Life Sanchay Plus: பொருளாதார நெருக்கடி சூழலை சமாளிக்க உதவும் எச்.டி.எஃப்.சி லைஃப் சஞ்சய் ப்ளஸ் திட்டம்




விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 150 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இவற்றில் இதுவரை 60 சதவீத நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே இதுவரை திறக்கப்பட்டு கடந்த ஒருவாரமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. குத்தாலம் தாலுக்கா தேரழந்தூரில் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இங்குள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் இதுவரை திறக்கப்படவில்லை. இங்குள்ள விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த சுமார் 40 மெட்ரிக்டன் நெல்லினை கொள்முதல் நிலையம் முன்பு குவித்து வைத்துள்ளனர். மேலும், கடந்த இரண்டு நாட்களாக காலை வேளையில் பெய்யும் மழையில் நனையாமல் பாதுகாக்க நெல்லினை தார்ப்பாலின் கொண்டு மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.


Budget 2023: அனைவருக்கும் பலனளிக்கும் பட்ஜெட் இது.. புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளம்.. பிரதமர் மோடி பேச்சு..




மேலும், ஓரிரு நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், உடனடியாக கொள்முதல் நிலையத்தை திறந்து நெல் கொள்முதலை தொடங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதமாக தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Palani Temple : ’பழநி முருகன் கோயிலில் ஆகம விதி மீறல்?’ மீண்டும் குடமுழுக்கு நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்..!