தரங்கம்பாடி அருகே சிங்கனோடை கிராமத்தில் 8 அடி வரை புடலங்காய் வளர்வதோடு நல்ல மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் புடலங்காய் சாகுபடியில் தீவரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். 

காய்கறி சாகுபடி 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சி, சிங்கனோடை கிராம விவசாயிகள் பாகற்காய், பீக்கங்காய், சுரைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகின்றனர். சிங்கனோடை கிராமம் புஞ்சை நில மணல்சாரி பகுதி என்பதால் இயற்கையாகவே இந்த மணலில் அனைத்து காய்கறிகளும் நன்கு செழித்து வளர்வதோடு கூடுதல் சுகையுடன் காணப்படும்.

Sanju Samson on Dhoni : ”மஹி பாய்! கொஞ்ச நாள் இருங்க பாய்!” தோனி ஓய்வு குறித்து சாம்சன் ஓபன் டாக்

நீண்ட ரக புடலங்காய் 

இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி வெளி மாவட்டத்திலும் இப்பகுதியில் விளையும் காய்கறிகளுக்கு மவுசு அதிகம். இத்தகைய சூழலில் இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் புடலங்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பெரும்பாலும் சந்தைகளில் குட்டை ரக புடலங்காய் மட்டுமே அதிக காணப்படும் நிலையில், நீண்ட ரக புடலங்காயில் அதிக சுவையும் சத்துக்களும் மருத்துவ குணங்களும் உள்ளதால் நீண்ட ரக புடலங்காயை மட்டுமே இப்பகுதி விவசாயிகள் காலம் காலமாக சாகுபடி செய்து வருகின்றனர்.

Annamalai on 2026 Election: தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..

பாதுகாக்கப்படும் விதைகள் 

தற்போது சந்தைகளில் குட்டை ரக புடலை விதை மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளதால் காலம் காலமாக நீண்ட ரக புடலை விதைகளை இவர்கள் பாதுகாத்து பயிரிட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பயிரிடப்பட்டுள்ள செடியில் கடைசியாக சில காய்களை பறிக்காமல் அப்படியே விட்டு வைத்து அடுத்த ஆண்டு பயிரிடுவதற்கு அந்த காயில் இருந்து விதைகளை சேமித்து வைத்துக் கொள்கின்றனர். புடலங்காய் சாகுபடிக்காக நிலத்தை பக்குவப்படுத்தி அதில் கருங்கல் தூண்கள் கொண்டு பந்தல் அமைத்து, பந்தல் கால்களுக்கு அடியில் சிறிய குழிகள் உருவாக்கி அதில் தொழு உரம் உள்ளிட்ட முற்றிலும் இயற்கையான உரங்களை மட்டுமே பயன்படுத்தி ஒரு குழிக்கு நான்கு விதைகள் மூலம் பல்வேறு குழிகள் அமைத்து அதில் புடலை விதைகளை விதைத்து நிலத்தடி நீர் மற்றும் குளங்களில் இருந்து தண்ணீர் இறைத்து பராமரித்து வருகின்றனர். 

Ind vs Ban weather report : மழை வருமா வராதா? இந்தியா vs வங்கதேசம்! ஷாக் கொடுத்த வானிலை அறிக்கை

8 அடி நீளம் வளர்ச்சி 

செடி நன்கு வளர்ந்து கொடிகள் படர தொடங்கியதும் அதை பந்தலில் ஏற்றிவிட்டு, தினமும் நீர் பாச்சி வரும் நிலையில் 45 நாட்களுக்குள் புடலங்காய் காய்க்கத் தொடங்குகிறது. இவ்வாறு இப்பகுதி விவசாயிகள் புடலங்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை முறையில் சாகுபடி செய்வதின் மூலம் புடலங்காய் நல்ல சுவையுடனும் அதீத சத்துக்களுடனும் காணப்படுகிறது. மேலும், இந்த புடலஞ்செடிகள் மூன்று மாதத்திற்கு பலன் தருவதோடு ஒரு புடலங்காய் அதிகபட்சமாக 8 அடி நீளம் வரை வளர்வதால் சந்தையில் நல்ல விலை போவதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.