மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ளது தண்டேசநல்லூர், அனுமந்தபுரம், நல்லூர், ஆச்சாள்புரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள். இங்கு சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயத்திற்கு மாற்றுப் பயிராக சாமந்திப்பூ விவசாயம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் சாமந்திப்பூ கோயில்களில் சுவாமிகளை அலங்கரிப்பதற்கும், இறப்பு நிகழ்வுகளுக்கும் சாமந்திப்பூ மாலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
IRE vs NZ: நியூசிலாந்து அணியை ஓட விட்ட அயர்லாந்து அணி... கடைசியில் நடந்த எதிர்பாராத சம்பவம்
இந்நிலையில், சாமந்திப்பூ என்று அழைக்கப்படுகின்ற சென்டு பூவிற்கு இந்த ஆண்டு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் சாமந்திப்பூ கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தோட்டக்கலைத் துறை மூலமாக முழுவதும் மானியத்தில் வழங்கப்படும் விதையை வாங்கி விவசாயிகள் சாமந்திப்பூ பதியவைத்து பயிரிட்டு வந்தனர்.
Susmita sen: இம்ரான் கான் முதல் லலித் மோடி வரை.. சுஸ்மிதா சென்-ஐ சுற்றிய டேட்டிங் பரபரப்புகள்!
இந்த சூழலில், இந்த ஆண்டு கடைமடை வாய்க்காலுக்கு சரியான முறையில் தண்ணீர் வராததால் குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகள் மாற்று பயிராக சாமந்திப்பூ விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது சாமந்திப்பூ விவசாயத்திற்கும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர். சாமந்திப்பூ கடந்த ஆண்டுகளில் ஒரு கிலோ 40 ரூபாய் வரை விலை போனதாகவும், தற்பொழுது 10 ரூபாய்க்கு விற்பதாகவும், இதனால் செலவு செய்த தொகையை கூட எடுக்க முடியவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும், கடந்த ஆண்டுகளில் அரசு மானியத்தில் வழங்கிய சாமந்திப்பூ விதைகளை இந்த ஆண்டு அதிகாரிகள் வழங்கவில்லை எனவும், உடனடியாக தங்களது விவசாய நிலங்களை வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய அறிவுரை வழங்கி மானியத்துடன் விதைகளை வழங்கிட வேண்டும் எனவும், அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட சாமந்திப்பூ விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற சூழலில் விவசாயிகளுக்கு அரசு உதவி முன்வரவில்லை எனில், விவசாயத்தை விட்டு விட்டு தாங்கள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுவோம் என வேதனையுடன் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்