திண்டுக்கல் மாவட்டம்  சாணார்பட்டி அருகே செங்குறிச்சியில் அமைந்துள்ள ஸ்ரீபகவதி அம்மன், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீமுத்தாலம்மன், ஸ்ரீகாளியம்மன் ஸ்ரீ மலையம்மன் கோவில்களில் மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஆனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.


மேலும் படிக்க: இலங்கைஇலங்கையின் புதிய அதிபர் யார்? களத்தில் சிறிசேனா - சஜித்! உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல்களம்!" href="https://tamil.abplive.com/news/india/bengaluru-man-driving-his-car-in-fried-oil-for-nine-years-61816" target="_blank" rel="noopener">யின் புதிய அதிபர் யார்? களத்தில் சிறிசேனா - சஜித்! உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல்களம்!




இந்த வருட திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 18 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


இதனைத் தொடர்ந்து இன்று அம்மனுக்கு பொங்கல் வைத்து கிடாவெட்டி அக்கினி சட்டி எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினார். விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று எண்ணெய் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.


மேலும் படிக்க: பஜ்ஜி சுட்ட எண்ணெயில் கார் ஓட்டலாம்.. 9 வருடங்களாக மாஸ் காட்டும் பெங்களூரு நபர்!




இதற்காக அய்யனார்புரம் அய்யங்கோடை மழையிலிருந்து சுமார் 80 அடி உயர கொண்ட மரம் வெட்டிக் கொண்டுவரப்பட்டு அதன் பட்டைகள் உறித்து வழுக்கும் பொருட்களான எண்ணெய், கேப்பை கற்றாளை போன்றவைகள் தடவப்பட்டு கோவில் மந்தையில் ஊண்டப்பட்டது.


ஊண்டப்பட்ட கழுமரத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் ஏற முற்பட்டனர். கழுமரம் ஏறும் போது வழுக்கி கீழே விழுந்தனர். மூன்று மணி நேரம் வருடத்திற்கு பின்பு ஒருவர் கழு மரத்தின் உச்சியில் ஏறி மேலே வைக்கப்பட்டிருந்த பரிசுகளை அவிழ்த்தார்.




மரத்தில் கட்டப்பட்டிருந்த  எலுமிச்சம் பழத்தை பக்தர்கள் பிரசாதமாக வாங்கி சென்றனர். இந்நிகழ்ச்சியினை காண செங்குறிச்சியினை சுற்றியுள்ள 18 பட்டி  கிராமத்திலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க: Rasi Palan Today : கன்னிக்கு அருமை..! கும்பத்துக்கு நிறைவு..! இந்த நாள் உங்களுக்கு எப்படி..?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண