தமிழகத்தில் மேட்டூர் அணையில் ஜூன் 12-ம் தேதி உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும், காவிரி டெல்டா கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 96 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பம்புசெட் வைத்திருக்கும் விவசாயிகள் ஏப்ரல் மாத இறுதியில் விதைவிட்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்துள்ளனர். முன்பட்ட சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தற்போது நன்குவளர்ந்து, தண்டு உருளும் பருவத்தில் உள்ளது. குறுவை சாகுபடிக்கு ஏற்ற ஆடுதுறை 43, ஆடுதுறை 50, ஏஎஸ்டி 16 போன்ற நெல் ரகங்களை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். 




பம்புசெட் நீரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களில் மஞ்சள் நோய் எனப்படும் செம்பேன் நோய் தாக்குதல் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பயிர்களின் தோகையில் வெளிர்மஞ்சள் நிறமாக மாறிவருவதோடு வயல்களில் பயிர்களை பார்த்தால் நெற்பயிர்கள் முற்றி பழுத்து இருப்பதுபோல் வெளிர் மஞ்சளாக தோற்றம் அளிக்கிறது. இதுகுறித்து, மயிலாடுதுறையை அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகாலிங்கம் என்பவர் கூறுகையில்,


Minister Ponmudi: கிடுக்குப்பிடி விசாரணை; தேவைப்பட்டால்.. அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை வைத்த ட்விஸ்ட்..




மயிலாடுதுறை மாவட்டத்தில் பம்புசெட் நீரை கொண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்டு உருளும் பருவத்தில் உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக வெயில்தாக்கம் அதிகமாக இருப்பதோடு, மாலை நேரங்களில் காற்றுபலமாக வீசுவதால் குறுவை நெற்பயிர்களில் மஞ்சள் நோய் எனப்படும் செம்பேன் நோய் தாக்குதல் பரவத்தொடங்கியுள்ளது. வேளாண் துறை அதிகாரிகள் பரிந்துரைக்கும் மருந்தினை பயிர்களுக்கு தெளித்தாலும் மஞ்சள் நோய் கட்டுப்படுவதில்லை.


Minister Ponmudi Meets TN CM: அமலாக்கத்துறை சோதனை.. இரண்டு நாட்கள் தொடர் விசாரணை.. முதலமைச்சரை சந்தித்த அமைச்சர் பொன்முடி..




இதனால், பயிரை அறுவடை செய்யும்போது மகசூல் பாதியாக குறையும் அபாயம் உள்ளது என அனைத்து விவசாயிகளும் வேதனை தெரிவிக்கின்றனர். விவசாயிகள், விவசாயத்துக்காக செய்யும் செலவுகள், விலைவாசி உயர்வு காரணமாக அதிகரித்துள்ள இந்த நிலையில், இதுபோன்று பூச்சி தாக்குதல் காரணமாக பூச்சி மருந்தினையும் அடிக்க வேண்டியதுள்ளதால், செலவு மேலும் அதிகரிக்கும் என்பதால் அரசு மஞ்சள் நோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை வேளாண் துறை மூலம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.