விவசாயிகளுக்கு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் மற்றும் மானியங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

Continues below advertisement

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) - Pradhan Mantri Kisan Samman Nidhi

இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 3 தவணையாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள். அரசு ஊழியர்கள், வருமான வரி கட்டுபவர்கள் உள்ளிட்டவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பகுதி பெற முடியாது. 

தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, விவசாய நிலச் சான்றிதழ் ஆகிய இரண்டு ஆவணங்கள் போதுமானது. கூடுதல் தகவல்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள, விவசாயத்துறை அலுவலகத்திற்குச் செல்லுங்கள். 

Continues below advertisement

பயிர்க்கடன்கள்

விவசாயிகளின் கடன் தேவைகளுக்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லாப் பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகின்றன.

பயிர் காப்பீட்டு திட்டம் 

இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிப்படையாமல் இருக்க, அரசு சார்பில் பயிர் காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அறிவிப்புகள், பருவத்திற்கு ஏற்றதைப் போல், அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்படுகிறது.

வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம்

விவசாயத்தில் இயந்திரங்கள் பயன்படுத்துவதை, மத்திய மற்றும் மாநில ஊக்குவித்து வருகின்றன. பவர் டிலர்கள் வாங்குவதற்கு 50% வரை மானியம் வழங்கப்படுகிறது. இதேபோன்று விவசாய தேவைக்காக பயன்படுத்தப்படும் பல்வேறு இயந்திரங்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன.

இலவச மின்சாரம் 

வருடம் தோறும் விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு சொந்தமாக கிணறு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மானிய விலையில் நெல் 

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ. 10 மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏக்கருக்கு 20 கிலோ நெல் விதைகள் வழங்கப்படுகிறது. அதேபோன்று ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயிர் வகைகள் 50% மானிய விலையில் வழங்கப்படுகிறது.

பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜனா - Pradhan Mantri Kisan MaanDhan Yojana (PM-KMY)  

இது விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம். அரசு மற்றும் விவசாயிகள் பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் 60 வயதை அடைந்த பிறகு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ. 3000 ஓய்வூதியம் பெறுவார்கள். விவசாயிகளின் வயதை பொறுத்து மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கட்ட வேண்டும். விவசாயிகள் எவ்வளவு ரூபாய் கட்டுகிறார்களோ, அதே அளவு பணத்தை அரசு மாதம் தோறும் கட்டும். அதாவது கிட்டதட்ட 50 சதவீதம் மானியமாக வழங்குவதை போன்று கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே பயன்பட முடியும்.

விண்ணப்பிப்பது எப்படி: இ-சேவை மையம் மூலமாக இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

 மண் சுகாதார அட்டை (SHC)

மண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை அறிந்து கொள்ளலாம். அதற்கு ஏற்றவாறு பயிர் செய்ய இந்த திட்டம் உதவி செய்கிறது. மண்ணின் தேவைக்கேற்ப, உரம் பயன்படுத்த உதவி செய்கிறது. இதனால் மகசூல் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்படும்.

நமோ ட்ரோன் தீதி - Namo Drone Didi

பெண்கள் சுய உதவி குழுக்களை மேம்படுத்துவதற்காக, விவசாய துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், கிராமப்புற பெண்களுக்கு வருமானம் ஈட்டும் திட்டமாக இது இருக்கிறது. சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன் வழங்கப்படும். 80 சதவீதம் வரை மானியமாக பிரவுன்கள் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 8 லட்சம் வரை வழங்கப்படும்.