அமராவதி ஆற்றில், சிமென்ட் பைகளை அலசுவதை மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால், தண்ணீர் பாதிக்கப்பட்டு, சாகுபடி பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, விவசாயிகள் புலம்புகின்றனர்.





திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை நிரம்பும் நிலையில், கரூர் மாவட்டம், அமராவதி ஆற்றுப்பகுதிகளில், நெல் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக சோளம் அறுவடை பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நிலத்தை சமன்படுத்தி, தழை சத்துக்காக, அவுரி செடி பயிரிடும் பணிகள் தொடங்கியுள்ளன.




இதனால், அமராவதி அணையிலிருந்து ஆற்றில் வினாடிக்கு, 2,163 கன அடி தண்ணீர் வரை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமராவதி ஆற்றுப்பகுதிகளான பெரிய ஆண்டாங் கோவில், சின்ன ஆண்டாங்கோவில், லைட் ஹவுஸ் கார்னர் சுக்காலியூர், கோயம்பள்ளி உள்ளிட்ட இடங்களில், சிமென்ட் பைகளை அலசும் பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர். இதனால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.


அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை வட்டாரங்களில் நெல் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அமராவதி ஆற்றில் காளி சிமெண்ட் பைகளை பலர் அலசி சுத்தம் செய்கின்றன. இதனால் தண்ணீர் மாசுபடுகிறது. கரூர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது.




 


இதுகுறித்து கரூர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் வழக்கம் போல் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அமராவதி ஆற்றில், சாயக்கழிவு கலப்பதை தான், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், பலத்த கவனிப்புக்காக நடவடிக்கை எடுப்பது இல்லை. சிமெண்ட் பைகள், அலசுவதையாவது, கரூர் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


அமராவதி ஆற்றில் சிமெண்ட் பைகளை அலசுவதை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதால் நெல் சாகுபடி பணிகள் அனைத்தும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும், தழை சத்துக்காக அவுரிச் செடி பயிரிடும் பணிகளும் தொடங்கியுள்ளன என்றும், ஆற்றுப்பகுதிகளை சுற்றி உள்ள ஊர்களில் சிமெண்ட் பைகளை அலசும் பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர் என்றும், அமராவதி ஆற்றில் தண்ணீர் மாசுபடுகிறது என்றும், இதனால் கூடிய விரைவில் கரூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பாசன விவசாயிகள் அச்சத்தில் கூறுகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண