தஞ்சாவூர்: குறுவை நெல் பயிரை தாக்கும் ஆணை கொம்பன் நோயை கட்டுப்படுத்துவது எப்படி என்று  தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.


டெல்டா மாவட்டங்களில் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல்தான். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடியும் செய்யப்படுகிறது. மேலும் நெல் அறுவடை முடிந்த பின்னர் கடலை, எள், பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வர். இருப்பினும் குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல்லும்தான் தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக உள்ளது.

கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடிதான் பிரதானமாக உள்ளது. நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல் பயிரை தாக்கும் ஆணை கொம்பன் நோயை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா தெரிவித்துள்ளதாவது:

பாபநாசம் வட்டாரத்தில் 6250 ஏக்கர் குறுவை நெல்  சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் குறுவை நெல் பயிரில் ஆணை கொம்பன் நோய் தாக்குதல் காணப்படுகிறது. தற்போது நிலை வரும் சீதோசன நிலை மற்றும் 83-87 சதவீதம் காற்றின் ஈரப்பதம் ஆகியவை ஆணை கொம்பன் தாக்குதலுக்கு உகந்த கால நிலையாகும். நாற்றங்களால் முதல் தூர்கட்டும் பருவ முறை பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. தாக்கப்பட்ட தூர்களில் உரைகள் அசாதாரண வளர்ச்சி அடைந்து வெள்ளை நிற கொம்பு போன்ற அல்லது வெங்காய இலை போன்ற சூழலாகவோ தோற்றமளிக்கும்.

இது இளம் பச்சை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் தோற்றம் அளிக்கும். சூழல் போன்ற தூள்களில் வளர்ச்சி இருக்காது. இந்த பூச்சியானது ஒன்றிலிருந்து 45 நாட்கள் வயதான இளம் பயிர்களை அதிகம் தாக்குகின்றன. இந்த பூச்சியின் முட்டைகள் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இலையின் அடிப்பகுதியில் கூட்டமாக காணப்படும். தாயந்து பூச்சிகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் கொசு போன்ற காணப்படும்.

வயல்களை தூய்மையாக வைத்திருத்தல் விளக்கு பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அளித்தல் ஆணைக்கொம்பன் எதிர்ப்பு திறன் உள்ள குருவை நெல் ரகங்களான ஏ டி டி 45, 48 ஆகியவற்றை விதைத்தல் புழு ஒட்டுன்னியான பிளாடிக் கேஸ்டர் ஒரைசாவை பயிர்களின் வேர் பகுதியில் விடுதல் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.

பயோமி தாக்சாம் 40 கிராம் பிப்ரோனில் 5 எஸ்ஸீ 500 கிராம் , க்ளோர்பைரி பாஸ் 500 மி.லி என்ற அளவில் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்து ஒரு ஏக்கருக்கு தேவையான 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து ஆணை கொம்பன் தாக்குதலை கட்டுப்படுத்துவது மூலம் நெல் பயிரில் மகசூல் இழப்பை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.