தஞ்சாவூர்: உலக சிறுதானிய ஆண்டு 2023 சோள சாகுபடி செய்து சிறந்த சத்துள்ள உணவினை உண்ணுவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகளை வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.


சோளம் ஆசிய, ஆப்பிரிக்கநாட்டு மக்களின் முக்கிய உணவுப் பயராகும். கால்நடைகளுக்கு சிறந்த தீவனப்பயிராகவும் விளங்குகிறது. இது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் பரவியது. சோளத்தில் மிகுந்த அளவு புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, உயிர் சத்துக்களான வைட்டமின்கள், தாது உப்புக்கள், மிகக் குறைந்த அளவில் கொழுப்பு சத்துக்கள் உள்ளன. இதனால் மனித உடலுக்கு சிறந்த சத்தான உணவாக கருதப்படுகிறது. வறண்ட பகுதிகளிலும் வளம் குன்றிய நிலங்களிலும் கூட பயிரிட ஏற்றது. தானியத்திற்கும், தீவனத்திற்கும் ஏற்ற சத்தான சோளப்பயிரினை சாகுபடி செய்ய தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இரகங்கள்

கோ.எஸ்.28, 30, வீரிய ஒட்டுச் சோளம் கோ.5

பருவம்: ஆடிப் பட்டம் (ஜூன்-ஜூலை), புரட்டாசிப் பட்டம் (செப்டம்பர்-அக்டோபர்), தைப் பட்டம் (ஜனவரி-பிப்ரவரி) சித்திரைப் பட்டம் (மார்ச்-ஏப்ரல்)


நிலம் தயாரித்தல்: கோடை மழையைப் பயன்படுத்தி பயிர் அறுவடைக்குப் பின்பு நிலததை சட்டிக்கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும்.

விதை அளவு: (கிலோ/ஹெக்டர்)
இறவைப் பயிர் 10 கிலோ, மானாவாரி 15 கிலோ,  இடைவெளி 45×15செமீ அல்லது 45×10 செமீ.

விதை கடினப்படுத்துதல்: விதைகளை 2 சதம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட்டை (20 கிராம்/லி) என்ற அளவில் தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைத்து பிறகு 5 மணிநேரம் நிழலில் உலர்த்த வேண்டும்.

விதை நேர்த்தி: அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட் (600 கிராம்/ஹெக்டர்)

நீர்ப்பாசனம்: விதைப்பு செய்தவுடன் 3ம் நாள். பிறகு 8-10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்தல் அவசியம்.

உர நிர்வாகம் மற்றும் நுண்ணுயிர் உரங்கள்:


மக்கிய தொழு உரம் 12.5 டன்/ஹெக்டர்

மக்கிய தென்னை நார்க்கழிவுடன் 10 பொட்டலம் அசோஸ்பைரில்லம் - 3 பாக்கெட், தழை, மணி, சாம்பல் சத்து

களை நிர்வாகம்: விதைத்த 30 மற்றும் 45 நாட்களில் களை எடுக்க வேண்டும். சோளம் தனிப்பயிராக பயிரிடும்போது அட்ரசின் என்ற களைக்கொல்லியை தெளிக்க வேண்டும். குருத்து ஈயை கட்டுப்படுத்த ஒரு ஹெக்டருக்கு 12 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கருவாட்டுப் பொறிகளைப் பயிரின் வயது 30 நாள் ஆகும் வரை வைத்து ஈக்களைக் கவர்ந்து அழிக்கவும். ஒரு ஹெக்டருக்கு மீதைல் டெமட்டான் 25 இ. சி. 500 மி.லி. அல்லது டைமித்தோயேட் 30 இ.சி.500 மி.லி தெளிக்கவும்.

தண்டு துளைப்பான் கட்டுப்பாடு (ஹெக்டருக்கு) குயினால்பாஸ் 5 சதவீத குருணை 15 கிலோ,  கார்போபியூரான் 3 சதவீத குருணை 17 கிலோ

கதிர் நாவாய் பூச்சிக் கட்டுப்பாடு (ஹெக்டருக்கு) பாசலோன் 4. சதவீத தூள் 25 கிலோ, வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதம் என்ற அளவில் தெளிக்கவும்.

கதிர் பூசாண நோய்: ஆரியோபன்ஜின்சால் 100 கிராம் / ஹெக்டா 4. அடிச்சாம்பல் நோய் - மேன்கோசெப் 1

அறுவடை: கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்தல் வேண்டும். உலர்ந்த சோளத்தட்டு தீவனமாகவும், தானியம் உணவாகவும் பயன்படுகின்றது. சோளத்தில் உடலுக்குத் தேவையான ஆற்றல். புரதம், உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. அரிசி சார்ந்த உணவை விட சோள உணவு சத்துள்ள உணவாகக் கருதப்படுகிறது. சோளத்தில் உள்ள அதிக நார்ச்சத்து, இதய நோய்கள். இரத்தக் கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் வருவதை குறைக்கும்.