மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இந்த கூட்டத்தில் இம்முறை எப்போதும் இல்லாத நிகழ்வாக முன்னதாக மேட்டூர் அணை திறக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது கல்லணை பகுதியில் தண்ணீர் திற்நதுவிடப்படவுள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Crime: பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனிடம் ’டீல்’ பேசிய குடும்பம்.. அதிர்ச்சியில் சிறுமி தற்கொலை..
இதனிடையே கிராமப்புறங்களில் உள்ள வாய்க்கால்களை விரைந்து தூர்வார வேண்டும் எனவும், கடந்த முறை ஏ, பி, வாய்க்கால் மற்றும் தூர்வாரப்பட்டு சி, டி வாய்க்கால் தூர்வாரததால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர் என்றும், இதனை கருத்தில் கொண்டு தண்ணீர் வருவதற்கு முன் அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். மேலும், பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு பிரதான பிரச்சினையாக இருப்பதாகவும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு அனைத்துதுறை அதிகாரிகளும் வருவதில்லை என்றும், விவசாயிகள் அடுக்கடுக்காக குற்றம் சாட்டினர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய மணக்குடி பகுதியை சேர்ந்த விவசாயி தான் 5 லட்சம் வரை கடன் வாங்கி விவசாயம் செய்வதாகும் அடிக்கடி டிரான்ஸ்பர் பழுதால் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் வரண்டு போய் கிடப்பதாகவும் 16 விவசாயிகள் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இது தொடர்பாக மின்வாரியத் துறை உயர் அதிகாரிகள் வரை கேட்டபோது சரியான விளக்கம் அளிக்க மறுப்பதாகவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின்வெட்டு தொடர்பாக கொடுத்த புகார் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் அழைப்பை எடுப்பதே இல்லை என்றும் , இது அப்பட்டமான பொய் எனவும் கடுமையாக சாடினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயத்துறை இருப்பதே தெரியவில்லை என்றும், அலுவலகத்தில் விவசாயிகள் சென்றால் அதிகாரிகள் தங்களை நிமிர்ந்து கூடப் பார்ப்பதில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தார். இது தொடர்பாக அங்கிருந்த அதிகாரிகள் மனுவாக பெற்றுக் கொண்டு கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிக்கு விளக்கம் அளித்தனர்.