விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு ( Chengalpattu News ) செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்- ( Agriculture Grievance day meeting ) பிரதி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை நடத்திட மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இவ்வுத்தரவின்படி, விவசாமிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 15.06.2023 வியாழன்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல்நாத் அறிவுரையின்படி, விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு 15.06.2023 அன்று நடைபெற இருந்த விவசாய நலன் காக்கும் கூட்டம் 22.06.2023 வியாழன் கிழமை காலை 10.30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்
விவசாயம் தொடர்புடைய கோரிக்கை
எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் முகக்சுவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத் தெரிவித்துள்ளார். காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் பெறுதலும், 11.30 மணி முதல், 12.30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பாக தங்கள் பகுதி பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்தலும், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை அலுவலர்கள் விளக்கம் அளித்தலும் நடக்க உள்ளது. விவசாயிகள் தங்களது பகுதி விவசாயம் சார்ந்த பிரச்சனைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்