விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று 4 பயனாளிகளுக்கு ரூ.1,24,000 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட    ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார்.


கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.


விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பதிலளித்து தெரிவித்ததாவது,


 


 


 




 


தென்னிலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் செல்ல பேருந்து வசதிகள் அமைத்து தருவது குறித்தும்,  கிராமத்தில் தார் சாலை அமைத்து தருவது குறித்தும், ஆடுகளை மாமிசமாக மாற்றுவதற்காக தொழிற்கூடம் அமைத்து தருவது குறித்தும், மாயனூர் மணவாசி கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கியில் விவசாயத்திற்கு தேவையான யூரியா வழங்குவது குறித்தும், மாயனூர் கதவணைக்கு நிலம் கையகப்படுத்தியது விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்தும், ஆத்தூர் வழி பாரப்பட்டி பிரிவு சாலையில் தார் சாலை அமைத்து தருவது குறித்தும், புகலூர் வாய்க்காலில் உள்ள பாலித்தீன் பைகளை அகற்றுவது குறித்தும், கருங்காலப்பள்ளியில் சீரான குடிநீர் வழங்குவது குறித்தும், மயான கொட்டகை அமைத்து தருவது குறித்தும், மகிழி கூனம்பட்டி கூனம்பட்டி கூனம்பட்டிப்பட்டியில் இடையூறாக  உள்ள பாலத்தை முற்றிலும் அகற்றுவது குறித்தும், கலைஞர் வீடு வழங்கும் திட்டங்கள் குறித்தும்,  வீரியம் பட்டியில் பள்ளி அருகில் உள்ள கிணற்றினை மூடுவது குறித்தும், பிச்சம்பட்டி கிளை நூலகம் அமைத்து தருவது குறித்தும், தெருவிளக்கு அமைத்து தருவது குறித்தும், கூனம்பட்டி தென்னிலை மேல் பாகத்திற்கு குடிதண்ணீர் வர ஏற்பாடு செய்வது செய்து தருவது குறித்தும், ஆதிதிராவிடர் காலனி தெருவிளக்கு அமைத்து தருவது குறித்தும், கட்டளை பால ராஜபுரத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைத்து தருவது குறித்தும், தெரு நாய்கள் தொல்லைகளை கட்டுப்படுத்துவதற்கான கால்நடை மருத்துவ அலுவலருக்கு அறிவூறுத்தனர். குறிஞ்சி நகர் என்று பெயர் மாற்றப்பட்ட கிராமத்திற்கு பெயர் பலகை மற்றும் அனைத்து விதமான சான்றுகள் வழங்குவது குறித்தும், வீரராக்கியத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவர் அமைத்து தருவது குறித்தும், விஸ்வநாதபுரி கிராமத்தில் கழிப்பறை கட்டித் தருவது குறித்தும், லாலாபேட்டையில் அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தை தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது அந்த ஆக்கிரமிப்பு அகற்றி சுற்றுச்சுவர் அமைத்து தருவது குறித்தும், காவல்காரன் பட்டியில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்தும், கீழவெளியூர் சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தருவது குறித்தும் விவசாயிகளிடம் விவாதிக்கப்பட்டது.


 விவசாயிகள் அளிக்கப்படுகின்ற கோரிக்கை மனுக்களுக்கு  உரிய காலத்தில் அவர்களின் கோரிக்கை தீர்வு காணப்பட வேண்டும் என அலுவலருக்கு அறிவுறுத்தினார். மேலும்,  கடவூர் வட்டத்தில் உள்ள பொன்னணியார் நீர்த்தேக்கத்தில் உள்ள பூங்காவினை சுற்றுலாத்துறை மூலம் புனரமைத்து சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும், அதே போல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கும், நீதிமன்ற வளாகத்திற்கும் இடைபட்ட பகுதியில் உள்ள 4.5 ஏக்கர் அளவுடைய பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் பூங்கா அமைப்பதற்காக பணிகள் நடைபெறவுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்/


மேலும், நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள். அதன் அடிப்படையில் 110  கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.


 




 


தொடர்ந்து தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக 1 பயனாளிக்கு ரூ.70000 மதிப்பில் 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வெங்காயம் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான ஆணைகளையும், கூட்டுறவு துறை சார்பாக ரூ.50,000 மதிப்பில் இலவச மின் இணைப்புடன் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான ஆணைகளையும், வேளாண்மை துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.4000 மதிப்பில் பேட்டரி தெளிப்பானும், ஆக மொத்தம் 4 பயனாளிக்கு ரூ.1,24,000 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.