திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளது. இங்கு  நெல் விளைச்சலில் தஞ்சைக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது திருவண்ணாமலை தான், மணிலா விளைச்சலில் மாநிலத்தில் முதலிடமும் பிடித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்  பால் உற்பத்தியில் நான்காம் இடத்தில் உள்ளது. எது எப்படியாக இருந்தாலும் விவசாயம் லாபகரமானதாக இல்லை என்பது பெரும்பாலான விவசாயிகளின் ஆதங்கமாகவே உள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை வேளாண் இணை இயக்குனர் ஹரி குமாரிடம் கேட்டபோது; இங்குள்ள விவசாயிகள் வேளாண்துறை கூறும் நவீன யுக்திகளை சரிவர பயன்படுத்துவதுவில்லை, பழைய  முறைப்படியே விவசாயம் செய்தால் அதிக மகசூல் கிடைப்பதில்லை என்றார். இம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 512 எக்டரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.


அதிக சாகுபடி தரும் நெல் ரகம் 


இங்கு மூன்று போக நெல் சாகுபடி செய்தாலும் கார்த்திகை, மார்கழி  மாதங்களில் விளையும் சம்பா நெல் சாகுபடி மட்டுமே 80 ஆயிரம் ஹெக்டரில் பயிரிடப்படுகிறது. புதிய ரக நெல் வகையான என்பிர்  606, மகேந்திரா, ஆடுதுறை 37, ஆடுதுறை 47, ஏடிபி 35 மற்றும் ஏடிஎப் ரகங்கள் பயிரிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.


அதிக சாகுபடி தரும் மணிலா ரகம் 


மணிலா இம்மாவட்டத்தில் 81 ஆயிரத்து 700 எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இதிலும் புதிய ரகமான விஆர் 8, டி எம் வி 14 , தரணி போன்ற மணிலா பயிரிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.


அதிக சாகுபடி தரும் கரும்பு ரகம் 


ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. இதிலும் புதிய ரகமான கோ 86032, கோ 11 015 கோவி 09 356 என்ற ரகங்களை பயிரிடப்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்,  ஊடுபயிராக விவசாயிகள் உளுந்து பயிரிடலாம் இதிலும் புதிய ரகமான விஎன் 8,  பிபிஎல் 10,  விபிஎன் 11 ஆகிய ரகங்களை பயிரிட்டால் நல்ல பலன் கிடைக்கும், இங்குள்ள விவசாயிகள் அருகாமையில் உள்ள வேளாண் அலுவலகத்திற்கு சென்று என்ன பயிரிடலாம் என்பதையும் ,எதை பயிரிடலாம் என்ன உரம் இடலாம் என்பதை கேட்டு அறியலாம் ஒட்டுமொத்தத்தில் திட்டமிட்டு நவீன யுக்திகளை கடைபிடித்து விவசாயம் செய்தால் லாபம் கிடைக்க பிரகாசமாக வாய்ப்புண்டு என இவ்வாறு அவர் தெரிவித்தார்.