திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பிஎம் கிசான்  உதவித்தொகையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் உடனடியாக இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறியதாவது; 


 


மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்கள் தவணைத் தொகையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கை இணைத்தல் இகேஒய்சி, டிபிடி மற்றும் நில ஆவணங்களை இணைத்தால் போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.


தபால் நிலையத்தில் விவசாயிக்கு ஜீரோ இருப்பு கணக்கு துவக்கம் 


வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியாத விவசாயிகள்  டிபிடி பணி செய்ய முடியாதவர்கள் மற்றும் வங்கி ரீதியான இடர்பாடுகள் உள்ள விவசாயிகள் தங்களுக்கு அருகாமையில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று புதிய சேமிப்பு கணக்கை தொடங்கி பயன்பெறலாம், கிராம தபால் நிலையத்தில் வழங்கப்பட்டுள்ள செல்போன் மற்றும் பயோமெட்ரிக் கருவி மூலமாக ஆதார் செல்போன் எண் பதிவு செய்து ஜீரோ இருப்பு கணக்கை விவசாயிகளுக்கு உடனடியாக தொடங்க வழிவகை செய்ய உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்னும் 856 விவசாயிகளின் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கப்படாமல் உள்ளதால் மேற்குறிப்பிட்ட பயணிகள் உடனடியாக வங்கிக்கு சென்று ஆதார் எண்ணெய் இணைக்க வேண்டும். 


விவசாயிகள் தங்களது 17-வது தவணைத் தொகை பெற எல்லா பதிவுகளையும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்


 


இது தவிர பதினைந்தாயிரத்து 674 பேர் இகேஒய்சி முடிக்காமல் உள்ளனர். அவர்கள் இ-சேவை மையம், தபால் நிலையம் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை அணுகி  தங்கள் விவரங்களை உடனடியாக பதிவு செய்யலாம். இது தவிர 710 பேர் தாங்கள் வங்கியில் டிபிடி இனத்தை பதிவு செய்யாமல் உள்ளனர். அவர்கள் தங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிய அல்லது தபால் அலுவலகம் சென்று பதிவு செய்யலாம். மேலும் 1039 விவசாயிகள் தங்கள் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இதுவரை இணைக்காமல் உள்ளனர். அவர்கள் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகலாம், விவசாயிகள் தங்களது 17-வது தவணைத் தொகை பெற எல்லா பதிவுகளையும் வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என இவ்வாறு செய்தி குறித்து தெரிவித்துள்ளார்.


TN Headlines: மாணவர்களுக்கும் ரூ.1000 அறிவிப்பு; ஜூன் 20ம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவை: இதுவரை இன்று