பழங்காலத்தில் இருந்து மனிதன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு உட்கொள்ளும் உன்னதமான நல்ல குணம் கொண்ட நல்லெண்ணெய் பெறுவதற்கு எளிமையான ஏற்ற பயர் சாகுபடி என்றால் அது எள் சாகுபடி தான். இதனை ஏற்ற பருவத்தில் சாகுபடி செய்து தொழில்நுட்பங்களை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் மகசூலை கூட்ட முடியும் என தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.



எள் பயிர் இறவை பட்டத்தில் அதிக மகசூல் கொடுப்பதால் இறவை எள் சாகுபடி செய்வது சிறந்தது. இதற்கு அதிக நீர் தேவையில்லை. மேலும் இப்பயிர் அதிக வெப்பத்தை தாங்கும் சக்தி கொண்டது.

பட்டமும் - ரகங்களும்:

இறவை பட்டம்: மாசி, பங்குனி மற்றும் சித்திரை

ரகங்கள்: டி எம் வி 3, 4,6, 7 விஆர்ஐ 2, எஸ்விபிஆர் 1

விதை அளவு மற்றும் பயிர் எண்ணிக்கை:

ஒரு ஏக்கருக்கு தேவையான 2 கிலோ விதையை மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும். இடைவெளி 30 சென்டிமீட்டருக்கு 30 சென்டிமீட்டர் இருக்க வேண்டும் ஒரு சதுர மீட்டரில் 11 செடிகள் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்பெண்டசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியுடன் இரண்டு பாக்கெட் இதர பயிர்கள் அசோஸ்பைரில்லம் கலந்து விதைக்க வேண்டும், இதன் மூலம் விதை வழியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம். அசோஸ்பைரில்லம் இடுவதன் மூலம் தழைச்சத்து இடுவதை குறைத்துக் கொள்ள முடியும்.

நுண்ணூட்டக் கலவை இடுதல்:

பாசன வசதி உள்ள இடங்களில் ஏக்கருக்கு இரண்டு கிலோ மாங்கனீசு சல்பேட், 20 கிலோ மணலுடன் கலந்து தூவ வேண்டும். ரசாயன உரங்கள் மானாவாரி நிலமாக இருந்தால் ஏக்கருக்கு யூரியா 20 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 30 கிலோ, பொட்டாஷ் 10 கிலோ இடவேண்டும்.
இறவை பாசனமாக இருந்தால் யூரியா 30 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ, பொட்டாஷ் 15 கிலோ இட வேண்டும்.

களை நிர்வாகம்:


நெல் பயிருடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்வது களைகள். இவைகள் சத்துக்களை எடுத்துக் கொண்டு எள் பயிரின் மகசூலை பெரிதும் பாதிக்கிறது. இவற்றில் நாய் கடுகு, சாரனை, பூண்டு ஆகியவை எள் சாகுபடி செய்யும் நிலத்தில் பெரிதளவில் முளைக்கிறது. இவ்வகை களைகளை எள் விதைத்த 40 நாட்கள் வரை கட்டுப்படுத்தினாலே பயிரின் மகசூலை அதிகரிக்க முடியும்.

எள் விதைத்த மூன்றாம் நாள் மண்ணில் ஈரம் இருக்கும் தருணத்தில் அலக்குலோர் ஏக்கருக்கு 500 மில்லி அளவில் மணலில் கலந்து இடவேண்டும் அல்லது கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கலைகளை கட்டுப்படுத்தலாம்.


பயிர் கலைதல்;

பயிர் கலைதல் என்பது எள் சாகுபடியில் முக்கிய தொழில்நுட்பமாகும் எல் விதைத்த 15 நாட்கள் கழித்து செடிக்கு செடி 15 சென்டிமீட்டர் இடைவெளி இருக்கும் மாறும் பின் பத்து நாட்கள் கழித்து செடிக்கு செடி 30 சென்டிமீட்டர் இருக்கும் படியும் பயிர்களை கலைத்து இடவேண்டும் பயிர்களை கலைத்து விடுவதால் செடிகள் நன்கு வளர்கிறது செடிகளின் கிளைகள் அதிகரிக்கிறது செடிகளுக்கு காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் அதிகமாக கிடைக்கிறது இதனால் செவிகளில் பூக்களும் காய்களும் கிளைகளின் அடிபாகத்தில் இருந்தே தோன்றுகிறது இதன் மூலம் மகசூல் அதிகரிக்கிறது.

நீர் பாசனம்:ஐந்தில் ஒன்று பிஞ்சில் ஒன்று என்கிற பழமொழிக்கேற்ப எழுச்செடி ஐந்து இலை விடும்போது நீர் பாய்ச்சுவதும் பிறகு பூவும் காயும் தோன்றும் போது நீர் பாய்ச்சுவதும் போதுமானது மேலும் மண்ணின் வீரத்தன்மையை அறிந்து நீர் பாய்ச்சுவதும் சிறந்தது.

எலி செடி பூக்காமல் குறையை நிவர்த்தி செய்ய எள் விதைத்த நாற்பதாம் நாள் பியானோ பிக்ஸ் 40 பி பி எம் 150 மில்லி ஏக்கருக்கு மற்றும் டிஏபி ஒரு சத கரைசலையும் சேர்த்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

என் பெயரை தாக்கும் பூச்சி இனங்களில் தளிர் பிணைக்கும் புழு காய் நாவாய் பூச்சி மற்றும் தத்துப்பூச்சி போன்றவை முக்கியமானதாகும் என்று அழைக்கப்படும் இப்பொழுது கைச்சடியின் நுனிப்பகுதியில் உள்ள தளிர் இலைகளை சேதப்படுத்துவதோடு அவற்றை ஒன்றாக சேர்த்து பிணைத்து அதனுள் இருந்து கொண்டு இலைகள் பூ மொட்டுக்கள் மற்றும் இளம் காய்கள் ஆகியவற்றையும் குடைந்து சாப்பிடும் இயல்புடையது.

இதனை கட்டுப்படுத்த வேப்பம் என்னை கரைசல் ரெண்டு சதம் அல்லது வேம்பு சார்ந்த மருந்துகள் சைபர் புள்ளி சைபர் மூன்று சதம் இருமுறை பூக்கும் முன் தெளிக்க வேண்டும்.


காய் நாவாய் பூச்சி:

இப் பூச்சி இளம் காய்களில் சாட்டினி உறிஞ்சி சேதப்படுத்துவதால் மகசூல் மற்றும் விதையின் தரம் பாதிக்கப்படுகிறது இதனை கட்டுப்படுத்த காய் பிடிக்கும் முதிரும் தருணத்தில் சேதம் அதிகம் இருப்பின் டை குளோர் வாஸ் மருந்து ஏக்கருக்கு 200 மில்லி வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

சாம்பல் நோயை கட்டுப்படுத்த நனையும் கந்தகம் ஒரு கிலோ வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம்