மயிலாடுதுறையில் வறட்சி, கனமழை என எந்த பருவத்திலும் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்வது குறித்து நடைபெற்ற பயிலரங்கத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மழை "பெய்தும் கெடுக்கும்", "பொய்த்தும் கெடுக்கும்" என்பார்கள். கடும் வறட்சியால் பயிர்கள் கருகினாலும், கனமழையால் பயிர்கள் மூழ்கினாலும் பாதிக்கப்படுவது என்னவோ விவசாயிகள் தான். இதனால் கடும் வறட்சி காலங்களிலும், கன மழை காலங்களிலும் அதிக பாதிப்பு ஏற்படாமல் விவசாயிகளுக்கு சமநிலையை ஏற்படுத்தும் விதமாக "காவேரி வேளாண் மண்டலத்தில் பல்நோக்கு விவசாயம்" என்ற தலைப்பில், மயிலாடுதுறையில் நடைபெற்ற பயிலரங்கத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 


Crime: ரூ.200 கேட்பியா? 16 வயது சிறுவனை ஈவு இரக்கமின்றி தாக்கிய கும்பல் - பெல்ட்டால் அடித்த கொடூரம்!




வேளாண் நெல் பண்ணைகளில் நெல் மட்டும் பயிரிடாமல், கன மழையை தாங்கி நிற்கும் பயிர் வகைகள், வறட்சியை தாங்கி வளரும் பயிர் வகைகளை பயிரிடுவதன் மூலம் எந்த பருவநிலையிலும் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படாது என இந்த பயிலரங்கில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, நெல் பண்ணையில் நிலக்கடலை, உளுந்து, வயது, காய்கறி வகைகள், மலர் செடிகள், பழ வகைகளை மண்ணின் தன்மையை அறிந்து பயிரிடுவதன் மூலம் விவசாயிகள் தங்களை நஷ்டத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தினர்.


Top 5 Film sequels 2024: புஷ்பா 2 முதல் இந்தியன் 2 வரை! 2024ல் ரிலீசாகப் போகும் பார்ட் 2 படங்கள் இதுதான்!




சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு மாநில உயர்கல்வி குழு உடன் இணைந்து வீரசோழன் உழவன் உற்பத்தி நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் பொருளாதார துறை இணை பேராசிரியர் மற்றும் பயிலரங்கு இயக்குனர் பிரபாகர் தலைமை வகித்தார். அண்ணாமலை பல்கலைக்கழக சர்வதேச தொடர்பு இயக்கக தோட்டக்கலை துறை மற்றும் இயக்குனர் கருப்பையா, மயிலாடுதுறை தோட்டக்கலை உதவி இயக்குனர் பொன்னி வீரசோழன் உழவன் உற்பத்தி நிறுவன தலைவர் சுகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


Ponmudi Profile: 3 எம்.ஏ. டிகிரிகள், ஆசிரியர் முதல் அமைச்சர் வரை... ஆட்டம் கண்ட அரசியல் வாழ்க்கை: யார் இந்த பொன்முடி கந்தசாமி?




ஏவிசி கல்லூரி பேராசிரியர் வன்மீக வெங்கடாசலம், வீரசோழன் உழவன் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் ராமலிங்கம் ஆகியோர் அனுபவ உரையாற்றினர். முடிவில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் பொருளாதார துறை திட்ட உதவி பொறுப்பாளர் சிங்காரவேல் நன்றி கூறினார்.


Meenakshi Ponnunga: தற்கொலைக்கு முயலும் யமுனா .. மீனாட்சி எடுத்த முடிவு - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் இதோ..!