விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி ஊக்குவித்து வருகிறது. மத்திய அரசின் வேளாண் வளர்ச்சி திட்டம் சார்பில் நெல் பயிரை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. இது தவிர பயிறு வகைகள் பயிரிடவும் மானியங்கள் வழங்கி வருகிறது. இதே போல் தேசிய உணவு எண்ணை  இயக்கம்  சார்பில் மணிலா பயிர் செய்ய விதைப்பயிர்களுக்கு மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தால் இம்மாவட்டத்தில் அதிக அளவு மணிலா பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில் வணிக பயிரான கரும்பு பயிரிட மானியம் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கரும்பு பயிரிட ஆர்வம் காட்டி வருகிறார்கள். மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டுதல் மற்றும் கிராம அளவிலான பயிற்சி அளிக்கப்படுகிறது. பிரதமரின் நுண்ணீர்  பாசன திட்டம் மற்றும் துணை நிலை நீர் மேலாண்மை ஆகியவற்றின் சார்பில் சிறு மற்றும் கூறு  விவசாயிகளுக்கு 100% மானியத்திலும் பெரு விவசாயிகளுக்கு 75% மானியத்தில் சொட்டு நீர் பாசனம் தெளிப்பு நீர் பாசனம் மழை நீர் தூவுவான் போன்றவற்றிற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தருகிறது.




மாநில அரசின் திட்டங்கள் 


அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுதல், வேளாண் விலை பொருட்களை மதிப்புக்குட்டி சந்தைப்படுத்துதல், கால்வாய் பாசன நீர் வழி தடங்களை தூர்வாருதல் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிர் கடன் வழங்குதல் போன்ற வழிமுறைகளால் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் மானிய விலையில் நெல் விதை விநியோகம் , சிறுதானிய விதை விநியோகம், பயிர் வகை விதைகள் விநியோகம் எண்ணை வித்து விதைகள் விநியோகம் ஆகிய பணிகள் நடந்து வருகிறது. உழவர் பயிற்சி நிலையம் சார்பில் உழவர் விவாத குழு அமைப்பாளர் பயிற்சி கிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி செயல் விளக்கம் போன்றவை நடத்தப்பட்டு வேளாண் வளர்ச்சிக்கு மாநில அரசு பல்வேறு வகைகளில் உதவுகிறது. சிறுதானிய விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் உழவு மானியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு மத்திய மாநில அரசுகள் வேளாண் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி வருகிறது குறிப்பிடத்தக்கது. இத்திட்டங்களை விவசாயிகள் நன்கு அறிந்து அதற்கு ஏற்ப அதனை செயல்படுத்தி உற்பத்தியை பெருக்க முன்வர வேண்டும்.


மேலும் படிக்க;Job Alert: 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்! ரூ.62,000 ஊதியம் - அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?