தருமபுரி அருகே அடுத்த அரியகுளம் பகுதியைச் சேர்ந்த நிஜாமுதீன் என்ற விவசாயி சவுதி அரேபியாவில் பேரிட்சை தோட்டத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்துள்ளார். 


வறட்சி போன்ற தர்மபுரி மாவட்டத்தில் பேரிச்சை வருமா என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் அரேபிய பேரிச்சை வகைகளை சாகுபடி செய்துள்ளார். இந்த சோதனையில் பெர்ரி உள்ளிட்ட 34 வகையான திசு வளர்ப்பு முறையிலான பேரிச்சை மரங்களை நடவு செய்துள்ளார்.


இந்த பேரிச்சை மரங்களுக்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சலாம், பராமரிப்பு செலவுகள் மிகவும் குறைவு. இதில் ஊடுபயிராக வேறு ஏதேனும் யிர்களை சாகுபடி செய்து விவசாயம் செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு 74 செடிகளை, 24 அடி இடைவெளியில் நடவு செய்ய முடியும். ஒரு ஏக்கருக்கு மகரந்த சேர்க்கைக்காக 8 ஆண் செடிகள் நட்டு வைத்துள்ளார். ஒரு செடிக்கு 200 கிலோ வரையில் மகசூல் கிடைக்கிறது. ஒரு கிலோ 150 முதல் 600 வரை விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கலந்து சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் தவிப்பதற்கு ஆளாகியுள்ளனர்.  தற்போது பேரிட்சை மரங்களில், மகசூல் அதிகரித்து பழங்கள் குழை குழையாக பழுத்து தொங்குகின்றன. இதன் அறுவடை நேற்று தொடங்கியது. இதனை உள்ளூர் சிறு விவசாய வியாபாரிகள் சில்லறை விற்பனைக்கு அவற்றை வாங்கி சென்றனர். 




மேலும் கோவை, திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள், வேளாண்மையில் மாணவர்கள் வந்து பேரிச்சை வளர்ப்பு, பராமரிப்பு குறித்து கேட்டு தெரிந்து கொள்கின்றனர். மேலும் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்தும் விவசாயிகள் பேரிச்சை கன்றுகளை வாங்கி செல்கின்றனர். தற்போது வெளிநாட்டிற்கும் நாற்றுக்கள் ஏற்றுமதி ஆகிறது. இங்கு 34 வகையான பேரிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது நேற்று முதல் அறுவடை தொடங்கியுள்ளது. இந்த அறீவடை ஆகஸ்ட் மாதம் வரை இந்த சீசன் இருக்கும். ஒரு கிலோ பேரிச்சை 150 முதல் 600 வரைக்கும் தோட்டத்தில் விற்பனை செய்யப்படுகிறது.


மேலும் ஒரு மரத்திற்கு 200 கிலோ வரை கிடைப்பதால் ஆண்டுக்கு 7 லட்சத்திற்கு மேல் வருவாய் கிடைக்கிறது. அதேபோல் பேரிச்சை தோட்டக்கலைத் துறையில் சேர்க்கப்பட்டுள்ளதால், அரசு விவசாயிகளுக்கு மானியங்களையும் வழங்கி வருகிறது. அதே போல் வங்கிக் கடனும் பேரிச்சை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பாலைவனங்களில் மட்டுமே விளையும் பணம் கொழிக்கும் பயிரான பேரிச்சை தர்மபுரி மாவட்ட விவசாயிகள் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாமல் விவசாயத்தில் போதிய மகசூல் மற்றும் வருவாய் இல்லாமல் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள், இது போன்ற குறைந்த செலவில் அதிக வருவாய் இட்ட கூடிய பயிர்களை சாகுபடி செய்யலாம். வரண்டு கிடக்கும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு பேரிச்சை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.