வெள்ளைச் சர்க்கரை உடல் நலத்துக்கு கேடு விளைக்கும் ஒன்று. சர்க்கரையில் எந்தவித ஆற்றலும், சத்துக்களும் இல்லை என்கின்றன ஆய்வுகள். வெள்ளைச் சர்க்கரை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது உடலின் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும். இதய பிரச்சினைகள் ஏற்படும். வெள்ளைச் சர்க்கரை சுத்திகரிக்கப்பட்டுவதால் இதில் எந்த சத்தும் இருப்பதில்லை. நாம் வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்தி பழகிவிட்டோம். அப்படியிருக்க, அதிலிருந்து மீள்வது கடினம்தான்.ஆஆ ஆனால், தினமும் இரண்டு ஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை எடுக்கக் கூடாது என்பதை பின்பற்றுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சர்க்கரையை முற்றிலுமாக எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். இதனால் மிக முக்கியமாக உடல் எடை அதிகரிக்கும். கெட்டக் கொழுப்பு உடலில் சேர்வதை தடுக்க முக்கியமான வழி சர்க்கரைக்கு நோ சொல்வதுதான். பயிற்சிதான் வழி; கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை எடுத்துகொள்வதை தவிர்த்துவிடுங்கள்.