பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.



சிறு வயதிலிருந்து அரசியல் வாழ்க்கை வரை அனைவரையும் வியக்க வைக்கிறார் ரிஷி சுனக்.



ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டங்களை பெற்ற ரிஷி, கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.



பிரிட்டன் நிதியமைச்சராக பொறுப்பு வகித்தபோது, கொரோனா பொருளாதார மீட்பு திட்டத்தை அறிவித்து வெகுவான பாராட்டை பெற்றார்.



பிரிட்டன் அரசியல்வாதிகளிலேயே பணக்காரர்களில் ஒருவராக உள்ள ரிஷி,



இந்தியாவின் இன்போசிஸின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.



கடந்த 1980ஆம் ஆண்டு, மே 12ஆம் தேதி, சவுத்தாம்ப்டனில் குடியேறிய இந்திய வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர் ரிஷி சுனக்



முதன்முதலில் ரிச்மண்ட் (யார்க்ஸ்) தொகுதியில் இருந்து 2015 இல் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



தெரசா மே அரசாங்கத்தில் இணை அமைச்சரானார்.



2019 இல், பிரிதமர் போரிஸ் ஜான்சனால் நிதியமைச்சகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.