பாவ் பன் மற்றும் உருளை கிழங்கு போன்றவற்றை வைத்து எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.
உருளைக்கிழங்கு -மூன்று, கடலை மாவு – ஒரு கப் , அரிசி மாவு – மூன்று மேசைக்கரண்டி ,பாவ் பன் (bun) – நான்கு வேர்க்கடலை – மூன்று மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை – இரண்டு கொத்து , கருவேப்பிலை – இரண்டு கொத்து , மஞ்சள் தூள் – அரைத்த தேக்கரண்டி பச்சை மிளகாய் – இரண்டு ,காய்ந்த மிளகாய்- ஒன்று ,தேங்காய்த் துருவல் – இரண்டு தேக்கரண்டி புளி- சிறிய உருண்டை , இஞ்சி பூண்டு விழுது – இரண்டு தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி , எள்ளு – கால் தேக்கரண்டி, உப்பு எண்ணெய் தண்ணீர் தேவையான அளவு
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிப்புக்கு தேவையானவற்றை போட்டி வெங்காயம் சேர்த்து வதக்கிய பின், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு, கால் தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும். கொத்தமல்லி இழை தூவி வதக்கவும்.
உருண்டைகளைப் பொறித்து எடுக்க கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள், எள்ளு, போன்றவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதம் வரும் வரை நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கு உருண்டைகளை எடுத்து மாவில் தொய்த்து எண்ணெய்யில் பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
வேர்க்கடலை, இரண்டு பல் பூண்டு, புளி, உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கடாயில் வறுத்த பின், இதனுடன் பொரித்த சில மிச்சரையும் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளலாம்.
-பாவ் Bun-ai இரண்டாக வெட்டி அதில் அந்த வேர்க்கடலைப் பொடியைச் சேர்த்து, பொரித்த உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து அதன்மேல் மிச்சர்கள் சிறிது தூவி விடலாம். இன்னொரு பாதியில் புதினா சட்னி தடவலாம். பன் -னுக்கு இடைடே உருளைக்கிழங்கு போண்டாவைவை வைத்தால் போதும்