ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் துபாய் டூரிஸ்ட் விசா எளிதாக கிடைத்துவிடும்

இதனால் இந்தியர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் இருக்கும் மக்களை ஈர்த்து வருகிறது இந்த அழகிய நகரம்

அண்ணாந்து பார்க்கும் கட்டிடங்கள், கலாச்சாரத்தை உணர்த்தும் பழைய நகரம் என அனைத்தும் இங்கு உள்ளது



அல் ஃபஹிதி, தேய்ரா சவுக், துபாய் அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு செல்லலாம்



பாலை வனத்தில் கார், ஒட்டகத்தில் சவாரி செய்வது புது அனுபவத்தை கொடுக்கும்



கேம்ப் போடும் இடங்களில் தங்கி, இரவில் மிளிரும் நட்சத்திரங்களை கண்டு ரசிக்கலாம்



துபாய் ஒப்பேரா ஹவுஸில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளை காணலாம்



உலகின் பெரிய மால்கள், துபாய் ப்ரேம், புர்ஜ் கலிஃபா,துபாய் மிராக்கிள் கார்டனிற்கு செல்லலாம்



மாலை அல்லது இரவு நேரத்தில் தோ க்ரூஸில் செல்லலாம்



துபாயை சுற்றி இருக்கும் ஃபுஜைரா, கோர்ஃபக்கான், அல் ஏய்ன், முஸ்காட் ஆகிய இடங்களுக்கும் செல்லலாம்



பர் துபாயில் கிடைக்கும் பாரம்பரிய அமீரக உணவுகளை மறக்காமல் ட்ரை செய்யவும்