டோலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுன் தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் இரண்டாவது மகன் குழந்தை நட்சத்திரமா திரை பயணத்தை தொடங்கியவர் 2003ம் ஆண்டு வெளியான 'கங்கோத்ரி' படம் மூலம் ஹீரோவானார் எந்த ஸ்டேப் என்றாலும் அசால்ட்டாக ஆட கூடிய சிறந்த டான்சர் புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்திய அந்தஸ்தை பெற்றார் லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் ட்ரெண்டிங் நடிகர் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்