தலைமுடி ஆரோக்கியமாக இருக்க நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது.



இதில் உள்ள வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.




கருவேப்பிலை நரை முடி வருவதை தடுக்கிறது. முடி வளர்ச்சிக்கு தேவையாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள. தினமும் உணவில் சேர்த்துகொள்வது நல்லது.


கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன.



ஊட்டச்சத்து மிகுந்த காய்ந்த கருப்பு திராட்சை



இதில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. தினமும் சிறிதளவு சாப்பிடலாம்.



ஃபிளாக்ஸ் சீட்ஸ்- இதை உணவில் சேர்த்துகொள்வதும், ஜெல்லா செய்து தலையில் பேக் போடுவதும் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும்.



அதிக அளவு மக்னீசியம், பாஸ்பரஸ், செம்பு, தியாமின், மாகனீஸ் மற்றும் நார் சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால் காயங்களினால் ஏற்படும் வீக்கங்களை குறைக்கிறது. இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது.



பச்சை பயிறு- வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது. அரிசியோடு பச்சை பயறு சேர்த்து பொங்கலாக சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும். பச்சை பயறை கொண்டு முடி உதிர்வதை தடுக்கும் உணவு தயாரிக்கலாம்.



தலைமுடி ஆரோக்கியமாக இருக்க நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது.