லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வெளியானது ‘தி வாரியர்’. டாக்டராக இருக்கும் ராம் பொத்தினேனி, பிரச்னை ஒன்றின் காரணமாக ஐபிஎஸ் அதிகாரியாகிறார். வில்லனாக வரும் ஆதியின் கதாபாத்திரத்தில் அழுத்தம் இல்லை. கீர்த்தி ஷெட்டியின் கெமிஸ்ட்ரியும், டான்ஸூம் துள்ளல். ராம் இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கலாம். லிங்குசாமியின் படங்களின் ஆகப் பெரும் பலம் ஆக்ஷனும் எமோஷனும். ஆனால் இரண்டுமே இதில் இல்லை. படத்திற்கு சப்போர்ட்டாக நிற்பது தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை. புல்லட் சாங் தூள் ரகம் தனக்கு கொடுக்கப்பட்ட அழகான வாய்ப்பை லிங்கு மீண்டும் தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.