தூக்கம் எல்லா உயிர்களுக்கும் ஒரு பிரேக். புத்துணர்வைத் தரும். தேவையான அளவு தூக்கம் இல்லை என்றால் உடல் நலமும் மனநலமும் பாதிக்கப்படும். 8 மணிநேர உறக்கத்தில்தான் உடலுக்கு தேவையான எனர்ஜி மற்றும் ஓய்வு கிடைக்கும். தற்போது மாறிவரும் வாழ்க்கைமுறையில் நம் தூங்கும் நேரமும் மாறிவிட்டது. இரவு வெகு நேரம் தூங்காமல் இருப்பவர்களுக்கு அடுத்த நாளை காலை ஒரு புத்துணர்வே கிடைக்காது. இதை உணவுமுறையில் மாற்றலாம். தினமும் பாதாம் சாப்பிடலாம். பூசணிவிதைகள் டயட்டில் சேர்த்துகொள்ளலாம். ஜாதிக்காய் நல்ல தூக்கத்திற்கு உதவும்.. அஷ்வகந்தா- தொந்தரவு இல்லாத தூக்கத்திற்கு இதை சாப்பிடலாம். கெமோமைல் டீ, தூங்க செல்வதற்கு முன்பு, இந்த டீ குடிப்பதால், மனம் லேசாகி தூக்கம் வருமாம்.