ஆயுதம் டூ அகிம்சை.. நல்லகண்ணு பற்றி அதிகம் அறியாத அரிய தகவல்கள்!
Published by: க.சே.ரமணி பிரபா தேவி
ஒரே கொடி, ஒரே கட்சி என்ற கொள்கையுடன் கடைசி வரை வாழ்ந்தவர்.
தனக்காகவும் குடும்பத்துக்காகவும் புத்தகங்களைத் தவிர எதையும் பெரிதாய் சேர்த்து வைக்காதவர். மகளின் காது குத்து விழாவுக்கு கவரிங் கம்மலை வாங்கிக் கொடுத்தவர்.
மாமனார் கொலைக்கு அரசு இழப்பீடாகக் கொடுத்த தொகையை, வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வித் தொகைக்கு அளித்தவர் நல்லகண்ணு.
தன்னுடைய 80ஆம் பிறந்த நாளுக்காக கம்யூனிஸ்ட் கட்சி ரூ. 1 கோடி நிதி வசூலித்துக் கொடுத்த நிலையில், அதைக் கட்சிக்கே மீண்டும் திருப்பித் தந்தவர் நல்லகண்ணு.
விருது பரிசுத் தொகையையும் பிறருக்கே அளித்துவிடுவது நல்லக்கண்ணுவின் வழக்கம். ஒருமுறை தமிழக அரசு அம்பேத்கர் விருது வழங்கி, ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கியது. அதில் 50 ஆயிரத்தைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார் நல்லகண்ணு.
போராட்டம் ஒன்றில் காவல்துறை மீசையை சுட்டுப் பொசுக்கிய நிலையில், மீசை வைப்பதையே நிறுத்தியவர்.