தமிழ்நாட்டில் வானிலை நிலவரம் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காணப்படுகிறது. ”தமிழகத்தில் 6ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு” 02.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 03.01.2023: தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 4 முதல் 6 வரை: தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு ஜனவரி-03: சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். வானிலை தகவலை தெரிந்து கொண்டு, முன்னெச்சரிக்கையுடன் இருப்போம்