வரலட்சுமி விரத பூஜை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் ?

Published by: ராஜேஷ். எஸ்

பஞ்சாங்கப்படி லக்ன முகூர்த்தங்கள் விவரங்கள்

காலை சிம்ம லக்னம் 6.23 முதல் 7.48 வரை இந்த நேரம் பூஜை செய்ய மிகவும் உகந்தது.

மதியம் விருச்சிக லக்னம் 12.06 முதல் 02.20 வரை.

மாலை கும்ப லக்னம் 06.16 முதல் 07.52 வரை பிரதோஷ காலம் பூஜைக்கு உகந்தது.

இரவு ரிஷப லக்னம் இரவு 11.10 முதல் நள்ளிரவு 01.10 AM வரை

ஆவணி பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் அனுசரிப்பார்கள்.

இந்த ஆண்டு 2026 வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை வருகிறது.

ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை பௌர்ணமி என்பதால் அந்த நாளும் கூட விரதம் இருப்பதற்கு சுபமானது.