இன்று பகுதி நேர சூரிய கிரகணம் ஏற்படுவதால் கர்ப்பிணிகள் இந்த 7 விஷயங்களையும் தவறாமல் கடைப்பிடிப்பது நல்லது.



இவை தாய், சேய் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.



சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது.



கிரகணத்தின் போது கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது.



சூரிய கிரகணத்தின் அந்த குறிப்பிட்ட நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் உணவேதும் அருந்துவதை தவிர்க்கலாம்



வீட்டின் ஜன்னல், கதவு ஆகியனவற்றை சாத்திவிட்டு ஜன்னலின் திரைச்சீலைகள் போட்டு உள்ளே இருக்க வேண்டும்.



கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் கைவளையல்கள், ஊக்குகள் போன்ற உலோகங்களை அணியக் கூடாது.



கிரகணம் முடியும் வரை மனதையும், உடலையும் அமைதியாக வைத்துக்கொள்ள மந்திரங்களை ஜபிப்பது நல்லது.



சூரிய கிரகணம் முடிந்த பின்னர் கர்ப்பிணி பெண்கள் குளிப்பது சாலச் சிறந்தது.



இவற்றை பின்பற்றினால் நல்லது என்று கூறப்பட்டுகிறது.