இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா. 9 வயது முதல் கிரிக்கெட் பயிற்சியை விளையாட்டாக இவர் தொடங்கினார். தன்னுடைய சகோதரருடன் முதலில் விளையாடினார். 11 வயதில் மகாராஷ்டிரா யு-19 மகளிர் அணியில் இடம்பிடித்து அசத்தினார். 15 வயதில் மகாராஷ்டிரா மகளிர் அணியில் இடம்பிடித்தார். 2013ஆம் ஆண்டு தன்னுடைய 17 வயதில் இந்திய மகளிர் டி20 அணியில் இடம்பிடித்தார். அதே ஆண்டில் இந்திய மகளிர் ஒருநாள் அணியிலும் இடம்பிடித்து அசத்தினார். 2014ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் களமிறங்கி அறிமுக போட்டியில் அரைசதம் கடந்து அசத்தினார். 2018ஆம் ஆண்டு ஐசிசியின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை முதல் முறையாக வென்றார். 2018ஆம் ஆண்டு இவருக்கு இந்திய அரசு அர்ஜூனா விருதை வழங்கி கௌரவித்தது. இந்திய மகளிர் அணியின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதம் கடந்து அசத்தினார். 2021ஆம் ஆண்டு 22 சர்வதேச போட்டிகளில் 5 அரைசதம் மற்றும் ஒரு சதம் உட்பட 855 ரன்கள் விளாசி ஐசிசி விருதை பெற்றுள்ளார்.