மேகி நூடுல்ஸ் என்றால் யாருக்குதான் பிடிக்காது. மாதத்திற்கு எத்தனை முறை சாப்பிடலாம். ஊட்டச்சத்து நிபுணர்களின் பதில்; ஒரு பாக்கெட் மேகியில் 205 கலோரிகள் மற்றும் 9.9 கிராம் புரதம் உள்ளது. மற்ற சிற்றுண்டிகளுடன் ஒப்பிடும்போது மேகியில் கலோரிகள் குறைவாக உள்ளன இருப்பினும், மேகி ஆரோக்கியமான உணவு இல்லை என்கிறார் கதூரியா இதில் வைட்டமின்கள், நார்ச்சத்து , தாதுக்கள் என எதுவும் இல்லை. சுவையை அதிகரிக்க இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ மேகி சாப்பிடலாம் அதற்கு மேல் அடிக்கடி மேகி சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல. மேகியில் எந்தவித சத்துக்களும் இல்லை.