இறால் டிக்கா மசாலா..

இறால்கள் வழக்கமான மசாவில் ஊறவிடவும்/

ஒரு கடாயில் வெண்ணெயில் ஊறவைத்த இறாலை சேர்த்து 4 -5 நிமிடங்கள் வரை நன்றாக சமைத்து எடுக்கவும்.

அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

தக்காளி பியூரி சேர்க்கவும்.அடுத்ததாக க்ரீம், தயிர், கரம் மசாலா ஆகியனவற்றை சேர்க்கவும்.

இவை நன்கு வதங்கிய பின்னர், வேகவைத்த இறால் மற்றும் தந்தூரி மசாலா தூள் சேர்க்கவும்

ப்ரான் டிக்கா தயார். நான் ரோட்டி அல்லது சூடான சாதத்துடன் பறிமாறலாம்.

இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.

இறால் சாப்பிடுவதால் நமக்கு புரதம், கால்சியம், பொட்டாசியம் கிடைப்பதால் சீரான இடைவெளியில் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.