உக்ரைன் மீது ரஷ்யா தீவிரமாக வெடிகுண்டு மழையை பொழிந்து வருகிறது


உக்ரைன் மீது தொடுக்கப்பட்டது போர் அல்ல ,
சிறப்பு ராணுவ நடவடிக்கை ஆகும் என்று ரஷ்யா விளக்கம் கொடுத்துள்ளது



விளாடிமிர் புதின், ரஷ்யாவின் குறுக்கே யார் வந்தாலும் அவர்கள் வரலாறு காணாத அழிவைச் சந்திப்பார்கள் என்று எச்சரித்துள்ளார்



உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்


உக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை
கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.



உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியுள்ளதால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது



கச்சா எண்ணெய் விலை 100 டாலரை கடந்துள்ளது



இந்தியாவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது



இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்



உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது