1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் ரோஜா காதல்-தேசப்பற்று இரண்டையும் சொன்ன இப்படத்திற்கு இன்றளவும் பல ரசிகர்கள் உள்ளனர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தில்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார் அரவிந்த சுவாமி ஹீரோவாக கலக்க, மதுபாலா ஹீரோயினாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார் இந்த படத்தினை இயக்குநர் பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார் படம் வெளியாகி மாஸ் ஹிட் அடித்து வசூல் வேட்டை புரிந்தது சிறந்த இசை, சிறந்த பாடல்கள் என பல விருதுகளை வாங்கி குவித்தது ரோஜா படத்தின் 30ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது கவிதாலயா நிறுவனம் அதில் மறைந்த இயக்குநர் கே பாலசந்தர் பேசிய க்ளிப்ஸ் இடம்பெற்றுள்ளது