இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகள் வரலாற்றில் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார்.



இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி-20 போட்டியில் ரோஹித் அதிரடியாக விளையாடினார்.



தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரில் 3 சிக்சர் விளாசினார்.



இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 175 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். டி20 வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனையையும் படைத்துள்ளார்.



தற்போது வரை 130 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 175 சிக்சர்கள் விளாசி முதலிடம் பிடித்துள்ளார்.



சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.



இவர் 138 டி20 போட்டிகளில் விளையாடி 3677 ரன்கள் விளாசியுள்ளார்.



இதன் மூலம், 7 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்று 8 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்றவுள்ள வீரர்கள் என்ற பெருமையை ரோகித் மற்றும் ஷகிப் பெற இருக்கின்றனர்.



ரோஹித் தனது திறமையை அடுத்தடுத்த போட்டிகளிலும் வெளிப்படுத்துவார் என்று தெரிகிறது.



வாழ்த்துகள் ரோகித்..