ஸ்மிருதி மந்தானா மகளிர் கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.



இதன்மூலம் அதிகவேகமாக 3000 ரன்களை கடந்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தானா படைத்துள்ளார்.



இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளிக்கு இடையேயான 2 ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் ஸ்மிர்தி இந்தச் சாதனை படைத்தார்.



இவர் 76 இன்னிங்ஸில் 3000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.



இவருக்கு முன்பாக இந்திய அணியின் ஜாம்பவான் வீராங்கனை மித்தாலி ராஜ் 88 இன்னிங்ஸில் 3000 ரன்களை கடந்து இருந்தார்.



அவரின் சாதனையை ஸ்மிருதி மந்தானா முறியடித்துள்ளார்.



சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிகவேகமாக 3000 ரன்களை கடந்த மூன்றாவது வீராங்கனையாக ஸ்மிருதி மந்தானா உள்ளார்.



சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் தற்போது வரை 22 பேர் 3000 ஒருநாள் ரன்களை கடந்துள்ளனர்.



இந்திய மகளிர் கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்த மூன்றாவது வீராங்கனை என்ற பெருமையையும் ஸ்மிருதி மந்தானா பெற்றுள்ளார்.



அவருக்கு முன்பாக மித்தாலி ராஜ் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகிய இருவரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3000 ரன்களை கடந்துள்ளனர்.