அரிசி கழுவிய நீரை வெளியே ஊற்றாதீர்கள்..அதில் பல பயன்கள் இருக்கிறது!



அரிசியை கழுவி கீழே ஊற்றும் நீரில் கார்போஹைட்ரேட்டுகள், ஆன்டி ஆக்சிடண்டுகள், தாதுக்கள் நிறைந்துள்ளது



அரிசியை 30 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் நன்றாக பிசைந்து கழுவி எடுக்கும் நீரை முகத்திற்கு பயன்படுத்தலாம்



அரிசி கழுவிய நீரில் முகத்தை கழுவி வந்தால், முகம் பொலிவாக மாறலாம்



அரிசியை நன்றாக பிசைந்து கழுவும் போது, கைகளில் இருக்கும் நுண்ணுயிரிகள் அரிசி நீருடன் வினை புரிந்து நொதித்தலை செய்கிறது



சருமம் பொலிவுற வேண்டும் என நினைப்பவர்கள் அரிசி நீரை முகம் மற்றும் கைகளில் தடவி கழுவலாம்



அரிசி நீரில் தலைமுடியை அலசினால் முடி உதிர்தல் தடுக்கப்படலாம்



தலைக்குளிக்கும் போது ஷேம்பு போட்டு தேய்தபிறகு அரிசி நீரில் தலைமுடியை மசாஜ் செய்து அலச வேண்டும்



கூந்தல் நீளமாக வளரும் என கூறப்படுகிறது



பிறந்த குழந்தைகளின் கால்கள் வலுப்பெற அரிசி கழுவிய நீரை கொதிக்க வைத்து அதன் கால்களில் ஊற்றி பிடித்து விடலாம்