சின்ன கலைவாணர் விவேக்கின் 61வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது

தனது நகைச்சுவை மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சில நடிகர்களில் இவரும் ஒருவர்

'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்

ஆரம்ப காலம் முதலே இவரின் நகைச்சுவை பொதுமக்களின் நலனுக்கு குரல் கொடுக்கும் வகையில் இருந்தது

சமூகம் மீது அக்கறை கொண்டிருந்த நடிகர் விவேக், அப்துல் கலாமை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டார்

கிரீன் கலாம் என்ற பெயரில் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருந்தார்

கல்விக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் விவேக்

17 ஏப்ரல் 2021 -ல், மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இவர் நடித்த அரண்மனை 3, தி லெஜண்ட் படங்கள் இவர் இறந்த பின் வெளியானது