இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் நேற்று உயிரிழந்த 2-ம் எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தனது முதல் மனைவியான இளவரசி டயானாவை 1996-ம் ஆண்டில் விவகரத்து செய்தார். விவாகரத்து செய்த அடுத்த ஆண்டே டயானா 1997-ல் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த மரணத்தில் மகாராணி பெயர் அடிபட்ட நிலையில் கடைசி வரை உண்மைகள் கண்டுபிடிக்கப் படவில்லை. அவரது மரணத்தில் இப்போது வரை மர்மம் நீடித்து வருகிறது பல ஆண்டு காலமாக இளவரசர் என்று சொல்லியே பழக்க பட்ட சார்லஸ் ராஜாவாக புதிய அவதாரம் எடுக்க உள்ளார். அது மட்டுமின்றி மூன்றாம் சார்லஸ் 54 நாடுகள் அடங்கிய காமன் வெல்த் நாடுகளின் தலைவராகவும் பொறுப்பேற்க உள்ளார். இவருடைய பதவியேற்பு விழா விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.