இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பின் காரணமாக நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். உலகையே உள்ளங்கையில் வைத்து ஆட்சி செய்த பெயர் இங்கிலாந்துக்கு உண்டு. அந்த நாட்டிற்கு 70 ஆண்டுகளாக ராஜ மாதாவாக இருப்பவர் தான் இரண்டாம் எலிசபத் மகாராணி. ஜனநாயகம் தழைத்தோங்கும் காலத்திலும் இங்கிலாந்து ராஜ குடும்பம் மட்டும் வசீகரம் குறையாமல் அப்படியே இருக்கிறது. ராஜா, ராணி மட்டுமே வரி வசூலித்த காலம் போய், அரசாங்கத்திற்கு ராஜ குடும்பம் வரி செலுத்தும் முறையையும் நடைமுறைப்படுத்தினார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் உலகில் எந்த நாட்டிற்கும் செல்ல பாஸ்போர்ட் தேவையில்லை. அவர் கார் ஓட்ட ஓட்டுநர் உரிமமும் தேவையில்லை. கிட்டத்தட்ட 15 நாடுகள் ராணியின் ஆளுமையின் கீழ் உள்ளன. அந்த நாடுகளில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய அரசை அமைக்கவோ ஆட்சியில் இருக்கும் அரசைக் களைக்கும் அதிகாரமும் உண்டு. ராணி இரண்டாம் எலிசபத் எந்த நாட்டின் மீதும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி படையெடுத்ததில்லை. 14 பிரதமர்களைக் கண்டவர்