விரைவில் வெளியாகவுள்ள படம் பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளது இதன் ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது அதற்காக படக்குழு இன்று கேரளா சென்றுள்ளது விக்ரம், கார்த்தி, மனிரத்னம், த்ரிஷா ஆகியோர் கேரளாவில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர் இதற்கு முன்னர் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது இன்று கேரளா சென்றுள்ள படக்குழு அடுத்து மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ளது இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு எகிறி வருகிறது தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது