ஏப்ரல் 1. 2026 முதல் நாட்டில் பல புதிய வருமான வரி விதிகள் அமலுக்கு வந்துள்ளன

Published by: குலசேகரன் முனிரத்தினம்

மத்திய அரசு 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வரி விதிப்பில் பல மாற்றங்களைச் செய்துள்ளது.

இந்த மாற்றங்களைப் பற்றி அறிந்துகொள்ளாவிட்டால் உங்களது பட்ஜெட்டில் துண்டு விழலாம்

கடந்த 1961 முதல் நடைமுறையில் இருந்த பழைய சட்டத்திற்கு பதிலாக புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வந்துள்ளது

வருமான வரி விகிதங்களில் வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆனால், வரி செலுத்துவோருக்கு இப்போது தங்கள் வரிகளை தாக்கல் செய்ய அதிக நேரம் கிடைக்கும்

ITR-3 , ITR-4 தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியை ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

அரசாங்கம் வரி வசூலிப்பதில் சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது

மது விற்பனை மீது டிசிஎஸ் 1 சதவிகிதம் முதல் 2 சதவிகிமாக உயர்த்தப்பட்டது.

வெளிநாட்டு பயணப் பொதிகளுக்கு LRS இன் கீழ் இப்போது ஒரே மாதிரியான 2% TCS வசூலிக்கப்படும்.

கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்தின் மீதான TCS ஐ 2 சதவிகிமாக குறைத்துள்ளனர்.