தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித் சார்பட்டா படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆக்ஷன் படத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது பா.ரஞ்சித் அட்டகத்தி பாணியில் அழகிய காதல் கதையை இயக்குவதாக அறிவித்தார் நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற காதல் படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார் கிஷோர்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் இப்படத்தின் இசையமைப்பாளராக தென்மா பணியாற்றியுள்ளார் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர் இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது போஸ்டரில் ஒரு பெண் தலைவிரிகோலத்துடன் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது என்று பா ரஞ்சித் அறிவித்துள்ளார்