சில்லா மிகவும் பிரபலமான ஒரு உணவாகும்.

ஒரு எனர்ஜெட்டிக்கான சூடான காலை உணவுக்கு ஏற்ற ஸ்டஃப்டு ஓட்ஸ் சில்லா ரெசிபி இதோ

நாம் ஸ்டஃப்பிங்கைத் தயார் செய்ய வேண்டும்.

இதற்கு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, மஞ்சள் தூள், கரம் மசாலா, கொஞ்சம் வேகவைத்த சோறு ஆகியவற்றுடன்

வெங்காயம், தக்காளி சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.

பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் மிளகாய் தூள் சுவைக்கு ஏற்ற அளவு சேர்க்கவும். சுமார் 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் சில்லா கலவைக்கு, ஒரு பாத்திரத்தில் உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மஞ்சள் தூள்,

பொடித்த ஓட்ஸ், எண்ணெய், தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். பின்னர் நன்றாகக் கலக்கவும்.

இப்போது ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கவும். சில்லா கலவையை வாணலியில் ஊற்றி வட்டமாக வார்க்கவும்.

மறுபுறம் புரட்டி, இருபுறமும் வேகும் வரை அதனை நன்கு சமைக்கவும்.

சில்லாவில் கொஞ்சம் ஸ்டஃபிங்கை வைத்து,

அதை மடித்து, கடாயில் இருந்து எடுக்கவும்.

ஸ்ஃடப்பட் ஓட்ஸ் சில்லா தயார்!