கார்த்திகையில் செய்யப்படும் பனை ஓலைக் கொழுக்கட்டை தென் தமிழகத்தில் பிரபலமானது



பனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி என பார்ப்போம்



தேவையான பொருட்கள்: பச்சரிசி, கருப்பட்டி, ஏலக்காய் தூள், தேங்காய், பனை ஓலை



செய்முறை - பச்சரிசியை கழுவி காய வைத்து, அரைத்து சலித்துக் கொள்ளவும்



பனை ஓலையை ஒரு மீட்டர் நீளத்தில் துண்டு துண்டாக நறுக்கி, இரண்டு பக்கமும் முனைகளை வெட்டவும்



சூடான கடாயில் மாவு சேர்த்து வறுக்கவும்



பின் ஒரு கப் தண்ணீரில் கருப்பட்டியை இளம்பாகு பதத்தில் காய்ச்சவும்



வறுத்த மாவு, தேங்காய் துருவல், ஏல பொடி, சுக்குப் பொடி,
கருப்பட்டி பாகு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்


பனை ஓலையின் நடுவில், மாவை வைத்து வெளியே தெரியாதவாறு கட்டி விட வேண்டும்



அதை இட்லி சட்டி அல்லது குக்கரில் அடுக்கி வேக வைத்தால் பனை ஓலை கொழுக்கட்டை ரெடி...